சாப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டுகோள்
கோவை: வங்கிகளில் அடமான பத்திர பதிவு (எம்.ஓ.டி) ஆன்லைனில் மட்டுமே செய்யும் முறை செப்.15ல் அமலுக்கு வந்தது. வங்கிகள் தாமதம் செய்வதால் இரு மாதங்களாக குறு சிறு நடுத்தர தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே உபகரணங்கள் வழங்குனர் சங்கத்தின் தலைவர் சுருளிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் எம்.ஓ.டி. அமலுக்கு வந்தும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வங்கிகள் சாப்ட்வேரை அப்டேட் செய்யாததால் குறு சிறு நடுத்தர தொழில்துறையினர் கடன் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள், தொழில் முதலீட்டு கழகத்தினர் தங்கள் சாப்ட்வேரை மேம்படுத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். ஆன்லைன் எம்.ஓ.டி. பதிவு முறையை தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.