உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொருட்கள் எடை விபரம் கண்டறிய ஆய்வு அவசியம்

பொருட்கள் எடை விபரம் கண்டறிய ஆய்வு அவசியம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், சூப்பர் மார்க்கெட், பெரிய அளவிலான பலசரக்கு கடைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், மளிகை, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பேக்கிங் செய்து, காலாவதி தேதி உள்ளிட்ட விபரங்களை தயார் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், விற்கப்படும் பொருட்களின் விலை, ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில், ரோட்டோர கடைகள், காய்கறி மார்க்கெட்டை மக்கள் நாடிச் செல்கின்றனர். இங்கும், சரியான எடையில் பொருட்களை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மக்கள் கண்டறிவதில்லை. சிலர் பயன்படுத்தும் தராசு, எடைக்கற்கள் சரியான அளவு உள்ளதா என்பதற்கான முத்திரை இருப்பதில்லை. மக்கள் கூறுகையில், 'வியாபாரிகள், லாப நோக்கில் இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவதால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கின்றனர். ஏற்கனவே ஒவ்வொரு பொருளும் அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில் அதன் எடையும் குறைவது அதிர்ச்சியடைச் செய்கிறது. எலக்ட்ரானிக் தராசு, சாதாரண தராசு, முத்திரை கற்களை ஆண்டுக்கு ஒருமுறை முத்திரையிட வேண்டும். சரியான எடையில் பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி