மறைமுக வங்கி கட்டணம் குறைக்க கோரி தீர்மானம்
கோவை: தமிழ்நாடு சிறு, குறுந்தொழில் முனைவோர் முன்னேற்ற சங்கத்தின் (டான்மிடா) பொதுக்குழு கூட்டம், பீளமேடு ஜோதி நகரில் நடந்தது. சங்க தலைவர் சங்கர நாராயணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில், சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி பெற மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். புதியதாக அமல்படுத்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும். பல வங்கிகள் சேவை கட்டணங்களை மறைமுகமாக உயர்த்தியுள்ளன. இந்த மறைமுக கட்டணங்களை வங்கிகள் குறைக்க வேண்டும். குறுந்தொழில்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். மூலபொருட்கள் விலையை கட்டுப்படுத்தவும், ஒரே சீராக இருக்கவும் வழிவகுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கும், பயிற்சி அளிக்க திறன்மேம்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.