உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வருவாய்த்துறையினர் போராட்டம்

கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வருவாய்த்துறையினர் போராட்டம்

கோவை; தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வருவாய்த்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலத்தை போக்கவும், பணியிடங்களை பாதுகாக்கவும், மூன்றாண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்புதல், கருணைப்பணி நியமனத்திற்கான உச்சவரம்பு, 25 சதவீதமாக உயர்த்துதல்,சிறப்பு பணி மற்றும் சான்றிதழ் பணிக்கு தாலுகா தோறும் கூடுதல் துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்துதல், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருக்கைகளில் அமர்ந்து வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ