உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்; அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்; அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு

கோவை : கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பதிலுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று (ஜூன் 28) நடைபெற்ற 'கற்றல் அடைவு' ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டார்.அப்போது, கட்டாய கல்வி உரிமைச் சட்டம், தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு (எஸ்.எல்.பி.,) பதிவு செய்த பிறகு, கல்வி இணையதளம் திறக்கப்படும்'' என தெரிவித்தார்.அமைச்சரின் இந்த பதிலுக்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு நிதி வழங்காததாக கூறும் தமிழக அரசு, இதுவரை நீதிமன்றத்தை அணுகாதது ஏன்? எங்களை போன்ற சிறிய அமைப்புகளால் கூட, நீதிமன்றம் மூலம் தீர்வு பெற முடிகிற நிலையில், தமிழக அரசால் முடியாதா?இந்த ஆண்டுக்காவது, ஒரு சில மாதங்களுக்கு முன்பே நீதிமன்றம் சென்றிருந்தால், மாணவர்களின் சேர்க்கை இடையூறு இன்றி நடைபெற்றிருக்கும்.சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு நிதி வழங்கும்வரை காத்திருக்காமல், திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று, ஏற்கனவே கூறியுள்ளது.மேலும், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம், 'விடுமுறை காலத்தில் விசாரிக்க முடியாது, விடுமுறை முடிந்த பிறகு விசாரிக்கலாம்' என்று கூறியுள்ளது.ஆனால், தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, அதன் பிறகு மத்திய அரசு நிதி வழங்கி, பிறகு மாணவர் சேர்க்கை நடை பெறும் என, அமைச்சர் கூறுவது முறையல்ல.கட்டாய கல்வி உரிமைச் சட்டம் குறித்து, கல்வி அமைச்சருக்கு கேள்விகள் துண்டறிக்கை கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை