வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்
அன்னுார்: அ.மேட்டுப்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி செயலரிடம், சமூக ஆர்வலர் குமார் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது : அய்யப்ப ரெட்டிபுதூரில் பால்வாடி மையம் முதல் மயான குட்டை வரை 650 மீட்டருக்கு வடிகால் அமைக்க வேண்டும். தார் சாலை முதல் கருப்பராயன் கோவில் வரை காங்கிரீட் ரோடு அமைக்க வேண்டும். இப்பணிகளை செய்தால் மட்டுமே மழை நீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்க முடியும். இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.