உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

அன்னுார்; 'அதி வேகத்தால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன,' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.நெடுஞ்சாலைத்துறையின் அன்னுார் உட்கோட்டம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னுாரில் நடந்தது. கைகாட்டியில் விழிப்புணர்வு பேரணியை கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தி துவக்கி வைத்து பேசுகையில், ''அதி வேகம், அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது. இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்,'' என்றார்.நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், அலுவலர்கள், சாலை பணியாளர்கள் பங்கேற்ற பேரணி மெயின் ரோடு, கோவை ரோடு வழியாக முடிந்தது.இதில், 'கார் பயணத்தில் சீட் பெல்ட் அணிய வேண்டும். வளைவுகளில் முந்தக்கூடாது. மொபைல் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைத்து கவனமாக கடக்க வேண்டும்.பிரிவு சாலையிலிருந்து, பிரதான சாலைக்கு திரும்பும் போது, இருபுறமும் கவனித்து திரும்ப வேண்டும். மித வேகம் மிக நன்று. தலைக்கவசம் உயிர்க்கவசம், பொறுப்புடன் ஓட்டுவோம், சிறப்புடன் வாழ்வோம் என்னும் கோஷங்களை எழுப்பினர்.விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் சுகுமாரன், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !