உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராணுவ தொழிற்பூங்காவில் ரோடு பணி; தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

ராணுவ தொழிற்பூங்காவில் ரோடு பணி; தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

சூலுார் ; வாரப்பட்டியில் ராணுவ தொழிற் பூங்காவில், ரோடு போடும் பணியை தடுத்து நிறுத்தி, விவசாயிகள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சூலுார் அடுத்த வாரப்பட்டியில், 350 ஏக்கரில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்பூங்கா பணிகள் நடக்கின்றன.முதல்கட்டமாக சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்நிலையில் அருகில் உள்ள விவசாயிகள் திரண்டு சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற எம்.எல்.ஏ., கந்தசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டார். தாசில்தார், கலெக்டர் ஆகியோரை தொடர்பு கொண்டு, விவசாயிகளுக்கான வழித்தடத்தை உறுதி செய்ய வேண்டும், எனக்கோரினார்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தொழிற்பூங்கா அருகில் எங்கள் நிலங்கள் உள்ளன. நாங்கள் பயன்படுத்தி வந்த ரோடு, பூங்கா அமைப்பதால் தடைபடுகிறது. எங்கள் நிலத்துக்கு செல்ல வழியில்லை. அதனால், எங்களுக்கான வழித்தடத்தை உறுதி செய்த பின்னரே பணிகளை செய்ய வேண்டும்,' என்றனர். 'கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை