உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவைக்கு ரோட்டரியின் புதிய சேவை திட்டங்கள்

கோவைக்கு ரோட்டரியின் புதிய சேவை திட்டங்கள்

கோவை: கோயம்புத்துார் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி, குனியமுத்துார் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. புதிய ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.எஸ்.மாருதி பேசுகையில், ''மிகப்பெரிய சமுதாய சேவை அமைப்பான ரோட்டரி சார்பில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த உள்ளோம். போதையில்லா கோவை, ஆரோக்கியமான சமுதாயம், பெண்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இயற்கையை மேம்படுத்த ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்க உள்ளோம். சமுதாய மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு சேவைகளை முன்னெடுக்க உள்ளோம்,'' என்றார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், சர்வதேச ரோட்டரி அமைப்பின் இயக்குனர் முருகானந்தம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செல்லாராகவேந்திரன், ராஜசேகர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி