உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் உள்கட்டமைப்புகளுக்கு மானியத்துடன் ரூ.2 கோடி கடன்

வேளாண் உள்கட்டமைப்புகளுக்கு மானியத்துடன் ரூ.2 கோடி கடன்

கோவை; மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ண வேணி அறிக்கை: அறுவடைக்கு பின்னாள் விளைபொருட்களை சுத்தம் செய்து, விற்பனைக்கு தயார்படுத்துதல் போன்ற அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை சார்ந்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கோவை மாவட்டத்துக்கு மானியம் வழங்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மூலதனத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கு, தலா 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவைகள், சேமிப்பு கிடங்கு, சேமிப்புக் கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடும் அமைப்பு, குளிர்பதன வசதிகள், பழங்களைப் பழுக்க வைக்கும் அறைகள் அமைத்தல், வேளாண் இயந்திர வாடகை மையம், முந்திரி பதப்படுத்துதல் போன்ற, 10 வகையான திட்டங்களுக்கு, மானியம் வழங்கப்படுகிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், வேளாண் நிறுவனங்கள், மத்திய மாநில அரசு நிறுவனங்கள், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை