உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாகன சோதனையில் சிக்கியது ரூ.2 லட்சம்

 வாகன சோதனையில் சிக்கியது ரூ.2 லட்சம்

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட, சாயிபாபா காலனி அழகேசன் ரோட்டில் கூட்டுறவு துறை துணை பதிவாளர் காஞ்சனா தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். காரில் வந்த ஒருவர், பேக்கில் ரூ.2 லட்சம் வைத்திருந்தார். அத்தொகையை பறிமுதல் செய்த குழுவினர், மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைத்தனர். நகையை அடமானம் செய்து பணம் எடுத்துச் செல்வதாக, காரில் வந்தவர் கூறினார். இருப்பினும், அதற்கான ஆவணங்களை கூடுதல் கலெக்டர் தலைமையில் செயல்படும் குழுவில் சமர்ப்பித்து, பணத்தை பெற்றுக் கொள்ள தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி