உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரிக்கு ரூ.8 லட்சம் நிதி

அரசு கல்லுாரிக்கு ரூ.8 லட்சம் நிதி

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில், 2019 - -20 கல்வியாண்டு முதல், பி.எஸ்சி., புவி அமைப்பியல் பாடம் கற்பிக்கப்படுகிறது. இத்துறையில், ஆய்வக வசதிகள் மற்றும் புவியியல் மாதிரிகள் பற்றாக்குறையாக இருந்து வந்தது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன், அரசு கலைக் கல்லூரியின் புவியியல் துறைக்கு எட்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்தது. அரியலூர், தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷனின், புவியியலாளர் பிரசாத், கல்லூரி முதல்வர் எழிலியிடம் இதற்கான காசோலையை வழங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ், புவியியல் துறைத் தலைவர் கவுதம், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை