ஆர்.எஸ்.எஸ். சந்திப்பு நிகழ்ச்சி
கோவை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நுாற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, சிறப்பு சாங்கிக் சந்திப்பு நிகழ்ச்சி துடியலுாரில் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குரு மாதவ் ராவ் கோல்வால்கர் மற்றும் ஜனசங்க நிறுவன தலைவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் சந்திப்பு, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் வளர்ச்சி ஆகியவற்றை பற்றிய உரை நிகழ்த்தப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு பின்பு ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திரளான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.