உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவை: மக்களை சந்தித்து விழிப்புணர்வு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவை: மக்களை சந்தித்து விழிப்புணர்வு

கருமத்தம்பட்டி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சேவை பணிகள் குறித்து மக்களை சந்தித்து தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைப்பின் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அமைப்பின் சேவை பணிகள் குறித்து விளக்கும் பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கருமத்தம்பட்டி அடுத்த இந்திரா நகர் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து, சேவை பணிகள் குறித்து நிர்வாகிகள், தொண்டர்கள் விளக்கினர். இதேபோல், சூலூர், சுல்தான்பேட்டை பகுதிகளில் அந்த அமைப்பின் தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ