அய்யப்ப பூஜா சங்கத்தில் ருத்ராபிஷேகம்; இன்று நவசண்டீ மஹாயக்ஞம் நடக்கிறது
கோவை; ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தின், 74வது பூஜா மஹோத்ஸவ விழாவின் இரண்டாவது நாளாான நேற்று, மஹன்யாச ஜெபம், ருத்ரஜபம், ருத்ராபிஷேகம் ஆகியவை சிவாச்சாரியார்கள் முன்னிலையில் விமரிசையாக நடந்தது.கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி சாலை ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில், ஆண்டுதோறும்பூஜா மஹோத்ஸவ வைபவங்கள் சிறப்பாக நடைபெறும். இரண்டாவது நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு கிராம பிரதக் ஷணத்துடன் பூஜைகள் துவங்கின.சிவாச்சாரியர்கள், வேத ஆகம வல்லுனர்கள் முன்னிலையில், நேற்று காலை 7:30 மணிக்கு கிராமபிரதக்ஷனமும், 6:30 மணிக்கு மஹாருத்ர சங்கல்பமும், 7:30 மணிக்கு மஹன்யாச ஜபமும் நடந்தன.தொடர்ந்து வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் மேற்கொண்டனர்.ருத்ரஜபங்கள் நிறைவேறியதையடுத்து,ருத்ராபிஷேகம், ருத்ரஹோமம் நடந்தது.காலை 11:00 மணிக்கு தம்பதி பூஜை, 11:30 மணிக்கு அன்னதானம் நடந்தது.மதியம் 12:15 மணிக்கு வசோர்தாரை, மஹா தீபாராதனை, மாலை 6:30க்கு குமாரி பூஜா ஸ்ரீதர், குமாரி ரசிகா ரமேஷ் மற்றும் பாலக்காடு நுாரணி குழுவினரின் நாமசங்கீர்த்தன இசை நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 6:30 மணிக்கு நவசண்டீயக்ஞ மஹாசங்கல்பம், 7:30 மணிக்கு சப்தஸதி பாராயணம், 9:30 மணிக்கு நவசண்டீமஹாயக்ஞம், 11:00 மணிக்கு தம்பதி, கன்னிகா, சுவாஸினி பூஜைகள் நடக்கின்றன. 11:30 மணிக்கு மஹா அன்னதானம், 12:00 மணிக்கு வசோர்தாரை, மஹாபூர்ணாஹுதி, மஹாதீபாராதனை, மாலை 6:30 மணிக்கு பாலக்காடு ஸ்ரீதர கானசபாவின்நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க நிர்வாகக்குழுவினர் மற்றும் அங்கத்தினர்கள் செய்து வருகின்றனர்.