உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி சக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று திருவிழா நடந்தது.கிணத்துக்கடவு, கோதவாடி சக்தி மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சிகள், கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி, கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. கடந்த, 9ம் தேதி, கணபதி ஹோமம், முளைப்பாரி எடுத்தல் மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடந்தது. 10ம் தேதி, பூவோடு விளையாட்டு, வஞ்சியம்மன் பொங்கல், சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. 11ம் தேதி, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல், கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வு நடந்தது. 12ம் தேதி, மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா நடந்தது.நேற்று, சுவாமிக்கு மகாஅபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை