உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

கோவை; கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஊதியம், பணி நேரம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். 'ஒரு நாள் விடுமுறை எடுத்தால், இரு நாட்கள் ஊதியம் பிடிக்கக் கூடாது. வருகை பதிவேட்டில் கையொப்பமிட தாமதம் செய்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்' என வலியுறுத்தினர். மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். உடன்பாடு ஏற்பட்டதால், துாய்மை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி