சர்பாசி சொத்து விற்பனை புரூக்பீல்ட்சில் கண்காட்சி
கோவை: இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும், சர்பாசி சட்டத்தின் கீழ், ஏல விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் குறித்த கண்காட்சி, புரூக்பீல்ட்ஸ் மாலில் நேற்று துவங்கியது. கண்காட்சியை, இந்தியன் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி திறந்து வைத்தார். காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். சொத்துகள் வாங்க விரும்புவோர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயனடையுமாறு, இந்தியன் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. வங்கியின் கோவை மண்டலம் தொடர்பான சர்பாசி சொத்துக்களுக்கு,63856 58389 என்ற எண்ணிலும், சேலம் மண்டலம் தொடர்பான சொத்துக்களுக்கு 90430 63133 மற்றும் திருப்பூர் மண்டலம் தொடர்பான சொத்துக்களுக்கு, 80727 58975 ஆகிய எண்களிலும் பேசலாம்.