மேலும் செய்திகள்
நலத்திட்ட கார்டுகள் வழங்கல்
07-Aug-2025
கோவை; கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும், ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பாக, 'கற்கை நன்றே' கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து ஏழை மாணவர்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் கல்லுாரி படிப்புக்கு தேவையான உதவித்தொகை, லேப்டாப், சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வி உதவித் தொகை பெற்று, படிப்பை முடித்து வேலையில் சேர்ந்துள்ள, 18 மாணவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் தில்லை செந்தில்பிரபு, இசிஐ சிஸ்டம்ஸ் செந்தில் குமார், சொல் முகம் வாசகர் வட்ட எழுத் தாளர் பூபதி, மற்றும் அறக்கட்டளை தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
07-Aug-2025