பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
வால்பாறை: வால்பாறையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்னை ‘உலாஸ்’ டிரஸ்ட் சார்பில், அரசு பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 20 மாணவ, மாணவிகளுக்கு, இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையை டிரஸ்ட் தன்னார்வலர் பாரிபாஸ்கர் வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் சிவன்ராஜ், ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.