பள்ளி - கல்லுாரி செய்திகள்
நேர நிர்வாகம், தன்னம்பிக்கை வாழ்க்கையை உயர்த்தும்
நேர நிர்வாகம், தன்னம்பிக்கை வாழ்க்கையை உயர்த்தும் என, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரி ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜெயபால் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.விழாவில், திருப்பூர் மெஜஸ்டிக் குழும நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'மாணவர்கள் குறிக்கோளை நிர்ணயம் செய்து, நேர நிர்வாகம், தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம்' என்றார். மாணவர்களின் யோகாசனங்கள், ஏரோபிக்ஸ், களரி பயிற்று, சிலம்பம், பிரமிட் நிகழ்ச்சிகள் நடந்தன. 'இலக்கியம் வாசிப்பில் ஈடுபாடு வேண்டும்'
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இலக்கிய விழா, தமிழ் துறை மாணவர் தமிழ் மன்றம் சார்பில் நடந்தது.விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீகானப்பிரியா தலைமை வகித்து பேசுகையில், ''மொழிதான் நம் உயிர். மொழி தான் நம் வாழ்வு என்பதை உணர்ந்து, இலக்கிய வாசிப்பில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். அதன் வாயிலாக ஒரு நல்ல அறிவு சமூகத்தை நாம் உருவாக்க முடியும்,'' என்றார்.விழாவில் நடந்த பேச்சு போட்டியில், மாணவியர் ஜெபிஷா, துர்கா, அனந்திகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 'தமிழும் தமிழினமும்' என்ற தலைப்பில், சிறப்பு விருந்தினர் ராஜ்குமார் பேசினார்.விழாவில் பேச்சு, கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டன.விழாவில் தமிழ்துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ் துறை கவுரவ விரிவுரையாளர் பொன்மாரி நன்றி கூறினார். கலை அறிவியல் கல்லுாரியில்ஆண்டு விழா
கோவை மாவட்டம், காரமடையில் உள்ள டாக்டர் ஆர்.வி. கலை, அறிவியல் கல்லுாரியில், ஆண்டு விழா நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், சபீதா, லக்ஷ்மி பிரவீணா மற்றும் காயத்ரி முன்னிலையில் நடந்தது.தொலைக்காட்சி கலைஞர்கள் குரேஷி, சரத், பாடகி ஸ்வேதா, பாடகர் சரண் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, திரைப்படப்பாடல்கள், நகைச்சுவைப் பேச்சால் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.கல்லூரி முதல்வர் ரூபா, நிர்வாகமேலாளர் மனோகரன், பேராசிரியர்கள்மற்றும் பலர் கலந்து கொண்டனர். மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவுக்கு பள்ளி முதல்வர் சசிகலா தலைமை வகித்தார். எல்.கே.ஜி., மாணவியர் சனாயா மின்ஹா, ஹிதாயாஷிபா வரவேற்றனர். தன்னம்பிக்கை பேச்சாளர் மனோரஞ்சித மலர் பங்கேற்று, சிறுவர், சிறுமியருக்கு பட்டங்களை வழங்கினார்.மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அலுவலர் சிவசதீஷ் குமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.யு.கே.ஜி. மாணவி மகிழினி நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோக முருகன் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.