உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா சாம்பியன்

பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் ராமகிருஷ்ணா சாம்பியன்

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது. பி.எஸ்.ஜி. மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியினர் 43.4 ஓவரில் 119 ரன் எடுத்தனர். எதிரணியின் ஆதித்யா 3 விக்கெட் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆர்.கே.எஸ். கல்வி நிலையம் பள்ளி அணியினர் 34.3 ஓவரில் 71 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். எதிரணியின் முகமது ஹாலித் 4, சச்சின் 3 விக்கெட் எடுத்தனர். வெற்றி பெற்ற அணியினரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை