கூடுதல் பஸ் விட பள்ளி மாணவர்கள் கோரிக்கை
அன்னுார்; காலை நேரத்தில் கூடுதலாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என எம்.பி.யிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அன்னுார் பேரூராட்சியில், பஸ் ஸ்டாண்டில் தாய்மார்கள் பாலூட்டும் அறை கட்டப்பட்டுள்ளது. மேலும் கவுண்டம்பாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் 85 லட்சம் ரூபாயில் சமுதாய நலக்கூடம், பஸ் ஸ்டாண்டில் 17 லட்சம் ரூபாய் செலவில் பயணிகளின் நிழல் குடை அமைத்தல் உள்ளிட்ட எட்டு பணிகள் ஒரு கோடியே 81 லட்சம் ரூபாயில் நடைபெற உள்ளன. இதற்கான துவக்க நிகழ்ச்சி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. நீலகிரி எம்.பி., ராஜா பணிகளை துவக்கி வைத்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவியர், எம்.பி.யிடம் காலை நேரத்தில் கோவில்பாளையம், காளப்பட்டி, பீளமேடு, வழியாக காந்திபுரத்திற்கு ஒரே டவுன் பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. கூடுதலாக டவுன் பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.பொதுமக்கள் பலர், மகளிர் உரிமைத் தொகை வேண்டும், வேலைவாய்ப்பு வேண்டும். இலவச தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர், நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், அறங்காவலர் குழுதலைவர் நடராஜன், கவுன்சிலர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.