வலுதுாக்கும் போட்டியில் எஸ்.டி.சி., இரண்டாமிடம்
பொள்ளாச்சி; பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான வலுதுாக்கும் போட்டியில், எஸ்.டி.சி., இரண்டாமிடம் பெற்றது.பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான வலுதுாக்கும் போட்டிகள், கோவை திருமலையம்பாளையம் நேரு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. இதில், பாரதியார் பல்கலை கழகத்துக்கு உட்பட்ட, 35 கல்லுாரிகள் பங்கேற்றன.பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி அணி மாணவர்கள், மொத்தம் உள்ள, எட்டு எடைப்பிரிவுகளில், இரண்டு தங்கம், 4 வெள்ளி உள்ளிட்ட, ஆறு பதக்கங்களுடன், 49 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றனர்.வெற்றி பெற்ற அணியினரை கல்லுாரி தலைவர் சேதுபதி, துணை தலைவர் வெங்கடேஷ், செயலர் விஜயமோகன், முதல்வர் வனிதா மணி, உடற்கல்வித்துறை இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் பாராட்டினர்.