உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு ‘சீல்’

அனுமதியின்றி கட்டிய கட்டடத்துக்கு ‘சீல்’

பி.என்.புதுாரை சேர்ந்த சக்தி ஸ்ரீதேவி, அதே பகுதியில் அனுமதியின்றி 2,405 சதுரடியில் கட்டடம் கட்டினார்.. உரிய அனுமதி பெற, நகரமைப்பு பிரிவு நோட்டீஸ் விநியோகித்து, 15 நாள் அவகாசம் வழங்கியும் அனுமதி பெறவில்லை. மேற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் அருள் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கட்டடத்திற்கு சீல் வைத்தனர். மாநகரில் அனுமதியின்றி கட்டும் கட்டடங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
செப் 24, 2026 15:47

நோட்டீஸ் கொடுத்த உடன் வந்திருந்தால் ஒரு லட்சம்..... தாமதமாக வந்ததால் எடு இரண்டு லட்சம்.... கத்தார் சிங்கப்பூர் காசு விளையாடுது, கட்டிடத்தின் வலது இடது பின்புறம் முன்புறம் விதிமுறைப்படி இடம் விடாமல் கட்டுவதும் லஞ்சம் கொடுத்து சரிகட்டுவது..... பிறகு மாநகராட்சியில் கட்டாய லஞ்சம் வசூலிப்பதாக புலம்பி தள்ளுவது வேடிக்கை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை