உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதிமீறல் கட்டடம் சீல் வைப்பு

விதிமீறல் கட்டடம் சீல் வைப்பு

போத்தனுார்; சுந்தராபுரம் அருகே லோகனாதபுரம், முதலியார் வீதியில் தங்கசாமி என்பவர் வீடு கட்டி வருகிறார். முறையான கட்டட அனுமதி பெறாமலும், கட்டுமான விதிகளுக்கு முரணாகவும் கட்டப்படுவதாக, அருகே வசிக்கும் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், கோவை மாநகராட்சி கமிஷனருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து, தங்கசாமிக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையில் நகரமைப்பு பிரிவினர் நேற்று சென்று கட்டடத்துக்குள் செல்லாத வகையில், சவுக்கு கம்புகள் நட்டு, துணியால் மறைத்தனர். மேலும், பூட்டு போட்டு 'சீல்' வைத்து, அறிவிப்பு பிளக்ஸ் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ