பிரதமர் கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
கோவை: பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தென்னிந்திய இயற்கை கூட்டமைப்பு சார்பில், வரும் 19ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, கோவை கொடிசியா வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடை பெறவுள்ளது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கவுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்கான பாதுகாப்பில், 3,000 போலீசார் ஈடுபட உள்ளனர். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.