சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கோவை: சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள், பார்சல் வைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் பிரத்யேக கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.