மேலும் செய்திகள்
'மினியேச்சர் ஷீட்டில்' திருமண அலங்காரம்
29-Oct-2024
தீபாவளி திருநாள் முன்னிட்டு, பல்வேறு நாடுகள் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, 'பார் எவர்' அஞ்சல் தலையை தீபாவளிக்காக வெளியிட்டுள்ளது. 'பார் எவர்' அஞ்சல் தலை என்றால், அதில் இத்தனை ரூபாய்/டாலர் என்று பண மதிப்பு இருக்காது. அதனால், இவ்வகை அஞ்சல் தலைகளை எப்போது வேண்டுமானாலும், குறைந்த மதிப்பு தபால்களை அனுப்ப, பயன்படுத்திக் கொள்ளலாம்.அதாவது, அஞ்சல் விலையேற்றம், இந்த வகை தபால் தலைகளை பாதிக்காது. 2012ம் ஆண்டு, இந்தியா - இஸ்ரேல் கூட்டாக, தீபாவளி அஞ்சல் தலை வெளியிட்டது. 2017ம் ஆண்டு, கனடா - இந்தியா கூட்டாக, தீபாவளி அஞ்சல் தலை வெளியிட்டது. (நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத் தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். இதையொட்டி, தினம் ஒரு தபால் தலையின் வரலாறை காண்போம்).
29-Oct-2024