மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் விதைப்பந்து தயாரிப்பு
01-Oct-2024
ஆனைமலை,: காந்தி ஜெயந்தி மற்றும் மறைந்த தொழிலதிபர் மகாலிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு, 15க்கு பங்களிக்கும் விதமாக, ஆனைமலை அருகே வனப்பகுதியில் விதைபந்து துாவும் நிகழ்ச்சி நடந்தது.மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியின் தேசிய மாணவர் படை சார்பில், ஆனைமலை வனப்பகுதியில் வளரக்கூடிய, 10 வகை மரங்களின் விதைகளை கொண்டு, ஒரு லட்சம் விதை பந்துகள் உருவாக்கப்பட்டன.இந்த விதை பந்துகள், வனத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து நடந்த விதை பந்து துாவும் நிகழ்ச்சியில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜா தலைமை வகித்தார்.தமிழ்நாடு விமானப் படை என்.சி.சி., கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன், விதைபந்துகள் உருவாக்குதல் குறித்து பேசினார்.கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி, டீன் முனைவர் செந்தில்குமார் ஆகியோர் விதைபந்துகளை தயாரித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சேத்துமடை வனப்பகுதியில், என்.சி.சி., மாணவர்களால் விதைப்பந்துகள் துாவும் பணி துவங்கப்பட்டது.பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபாலமுருகன், கல்லுாரி என்.சி.சி., அதிகாரிகள் கேப்டன் சரவணகுமார் மற்றும் லையிங் ஆபீசர் லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தார்.
01-Oct-2024