மேலும் செய்திகள்
காரமடையில் இன்று மனவளக்கலை பயிற்சி
09-Dec-2024
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில், மகளிருக்கு கூடை பின்னுதல் பயிற்சி வழங்கப்படுகிறது.ஆழியாறு அறிவுத்திருக்கோவில் சார்பில், கிராமிய சேவை திட்டத்தின் கீழ், மாக்கினாம்பட்டி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஐந்து மாதங்களில், மக்களுக்கு மனவளக்கலை பயிற்சிகளை வழங்குகின்றனர். தினமும், யோகா, காயகல்ப பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கூடை பின்னுதல், தையல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மனநல ஆலோசனை, மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி, மாக்கினாம்பட்டி சுய உதவிக்குழு கட்டடத்தில் வழங்கப்படுகிறது. இலவச பயிற்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம். காலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாக, பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
09-Dec-2024