மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் தரவு பகுப்பாய்வு பயிற்சி
17-Jul-2025
அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அரிய தகவல்
14-Jul-2025
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் மையம் சார்பில், 'பயிர் தாவரங்களில் மரபணு திருத்தம்' குறித்த, நான்கு நாள் பயிற்சி முகாம் துவங்கியது. துறை இயக்குனர் செந்தில் துவக்கி வைத்து, பயிர் மரபணு திருத்தத்தின் தேவைகள், உலக அளவிலும், கோவை வேளாண் பல்கலை அளவிலும் மேற்கொள்ளப்பட்ட பயிர் மரபணு திருத்த பணிகள், மரபணு திருத்தம் வாயிலாக, நெல் மகசூல் அதிகரித்ததில் வேளாண் பல்கலையின் சாதனைகள் குறித்து விளக்கினார். தாவர உயிர் தொழில்நுட்பவியல் துறை தலைவர் கோகிலாதேவி, பேராசிரியர்கள் அருள், குமார், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல்கலை, கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
17-Jul-2025
14-Jul-2025