உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூத்தோர் தடகளப் போட்டியில் தடம் பதித்த சீனியர் வீரர்கள்

மூத்தோர் தடகளப் போட்டியில் தடம் பதித்த சீனியர் வீரர்கள்

கோவை : நேரு ஸ்டேடியத்தில் நடந்த மூத்தோருக்கான தடகளப்போட்டியில், 200க்கும் மேற்பட்ட சீனியர் போட்டியாளர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மூத்தோருக்கான மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், மூத்தோருக்கான ஓட்டப்பந்தயம், நடையோட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், வயது பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும், 30வயதுக்கு மேற்பட்டோருக்காக நடத்தப்படும் இப்போட்டியில், இந்தாண்டு முதல் 25 - 29 வயது வரை என, ஒரு புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 100மீ., 400மீ., 800மீ., 3000மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை