உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தில் சர்வர் மக்கர்! அறிமுகமான முதல் நாளே தாமதம்

ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டத்தில் சர்வர் மக்கர்! அறிமுகமான முதல் நாளே தாமதம்

கோவை: வருகையில்லா ஆவணப்பதிவு ஸ்டார் 3.0 திட்டம் அறிமுகமானது. முதல் நாளே சர்வர் தொய்வடைந்ததால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும், ஆன்லைன் முறையில் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கேற்ப சர்வரின் திறன் அதிகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கோவையிலுள்ள பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திரப்பதிவுகள் தாமதமாகின. கோவையில் உள்ள 19 சார்பதிவாளர் அலுவலகங்களில், 10 அலுவலகங்களில் மட்டும் 50 ஆவணங்கள் பதிவாயின. சர்வர் தாமதம் காரணமாக பாக்கி ஆவணங்கள் அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஏற்கனவே முன்பதிவு செய்து டோக்கன் பெற்று நேரில் வந்தவர்களுக்கு, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்டார் 3.0 வருகையில்லா ஆவணப்பதிவுத்திட்டத்தில் உள்ள சில குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். சர்வரின் திறனை அதிகரிக்க வேண்டும். மோசடிக்கு வழிவகுக்கும் சில காரணிகளை மாற்றியமைத்தால்தான் இத்திட்டம் வெற்றி பெறும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

CBE CTZN
ஆக 18, 2026 18:08

லஞ்சப் பெருச்சாளிகள் சர்வரை வேலை செய்ய விடாதுகள் ...


Chandhra Mouleeswaran MK
ஆக 18, 2026 12:25

பத்திரப் பதிவுத் துறையில் பூ பிஞ்சு காய் பழம் எல்லாவற்றையும் தின்று கொட்டை போட்ட பெருச்சாளிகள் உடனே எங்காவது அஸ்ஸம் ஜார்கண்டு வாக்கில் தூக்கி அடிக்கப் படவேண்டும், குடும்பம் பெண்டு பிள்ளைகளோடு இல்லாவிட்டால் இந்தத் திட்டத்தை ஒழித்தே விடுவான்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள மரங்களில் இருக்கும் பல்லி பாப்பிராணி ஓணான் கூட லஞ்சம் வாங்காமல் நம்மை விடாது சர்வரை வேண்டுமென்றே ஒவர்லோடு செய்து பழுதாக்கி இருப்பான்கள் அதெப்படிப் புத்தம் புது சர்வர் திடீரென்று பழுதாகும்? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டல் அப்புறம் பதிவு வெட்சைட்டில் லஞ்சம் வரவு வைக்கப் பட்டால்தான் பதிவு நடக்கும் என்று "லஞ்சப் ப்ரொக்கிராம்" ஒன்றை நிறுவி வைப்பான்கள்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 18, 2026 09:45

ஆன்லைன் பத்திரப்பதிவு வரவிடாமல் செய்வதற்கு ஆரம்பத்திலேயே முயற்சி செய்கிறார்கள்....


சமீபத்திய செய்தி