உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் 17 வயது சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது

கோவையில் 17 வயது சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கல்லூரி மாணவர்கள் ஏழு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5q62btok&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

தமிழ் மைந்தன்
பிப் 18, 2025 21:30

உங்கள் தலைவன் யோக்கியமானவனாக இருந்தாலே போதும் . அது முடியுமா ?


J.Isaac
பிப் 18, 2025 19:38

பல நாள் திருடர்கள் ஒரு நாள் பிடிப்பட்டுள்ளார்கள் இதில் பெண்களுக்கும் பங்குண்டு. காரணம்:, பெற்றோருக்கு கீழ்ப்படியாதது


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2025 19:00

மாணவர்களின் பெயர்கள் என்னென்ன ? மர்ம மாணவர்களோ ?


M S RAGHUNATHAN
பிப் 18, 2025 18:54

இந்த மாணவர்கள் எந்த வகுப்பை சேர்ந்தவர்கள் என்று வெளிப் படுத்த வேண்டும். மேலும் இவர்கள் ஏதாவது வங்கியில் கல்விக் கடன் வாங்கி இருந்தால் அதை freeze செய்து பெற்றோர்கள் மேல் வழக்கு தொடுக்க வேண்டும். இந்த மாணவர்களின் குடும்பங்களை social boycott செய்ய வேண்டும். நிரந்தரமாக போலீஸ் குறிப்புகளில் இவர்கள் பெயர் இருக்க வேண்டும். போலீஸ் clearance தேவை இருந்தால் நிறுத்தி வைக்க வேண்டும்.


Sudha
பிப் 18, 2025 17:45

நடந்து முடிந்த அசிங்கத்தை ஆதி முதல் ஆராய்ந்து கட்டுரையாக வெளியிடுங்கள் யார் மீது எவ்வளவு தவறு இருந்தது என்று பார்ப்போம். முக்கியமாக சமூக அநாகரீக தளத்தை நாட்டிலிருந்து வெளியேற்ற உறுதி பூணுவோம்


P. SRINIVASAN
பிப் 18, 2025 17:26

போதையை ஒயித்தால் குற்றங்கள் குறையும். அதற்க்கு எந்த அரசும் தயாராகஇல்லை .. மிகுந்த வேதனை அளிக்கிறது..


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 16:53

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் எல்லா ஆண்கள் விடுதிகளிலும், எல்லா டீனேஜ் பெண்கள் வீடுகளிலும் ஒவ்வொரு போலீஸ் போடணுமா?? இ பி எஸ், அண்ணாமலை மற்றும் இங்கே அரசை விமர்சிக்கிற வாசகர்கள் கமெண்ட் டில் சொல்லுங்க.


Raj S
பிப் 19, 2025 01:23

இல்லிங்க... கையாலாகாத கோபால புர கும்பல் ஓங்கோலுக்கு திரும்பி போய்டணும்... உங்களுக்கெல்லாம் உங்க வீட்டுல நடக்கறவரைக்கும் வலி தெரியாது...


என்றும் இந்தியன்
பிப் 18, 2025 16:39

பலாத்காரம் கற்பழிப்பு அதாவது உடல் உறவு கொள்ளுதல் இதற்கு 50% பொறுப்பு பெண்களுக்கும் உள்ளது அதை எல்லோரும் மறந்து விடுகின்றார்கள். 1 பெண்ணின் விருப்பமின்றி உடல் உறவு கொள்ள முடியாது ஒருவன் ஓருத்தியுடன். பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் அந்த பெண்ணை பிடித்து, இல்லை கட்டிப்போட்டு தான் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ள முடியும். 2 சாக்லேட் இனிப்பு சாப்பாடு வாங்கிக்கொடுத்து சிறு பெண்குழந்தைகளிடம் உடல் உறவு கொள்ள முடியும் 3 உன்னையே திருமணம் செய்து கொள்கின்றேன் என்று உத்தரவாதம் வேறு வார்த்தையில் கூறி உடல் உறவு கொள்ள முடியும். ....................... இப்போது நடக்கும் பல பலாத்காரங்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. இன்ஸ்டாங்க்ராமில் பழக்கம் வாட்ஸப்பில் பழக்கம் அவன் கூப்பிட்டானாம் இவள் சென்றாளாம் பலாத்காரம் செய்யப்பட்டாளாம்????


Raja Mani
பிப் 18, 2025 16:28

ஒரு நாட்டின் வாழ்வியல் முறை என்று சொல்லப்படும் தர்மம் தான் அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும். நமது நாடு பின்பற்ற வேண்டிய சனாதன தர்மத்தை அழிக்க முயற்சி செய்யும் போது நாட்டு மக்கள் துன்பங்களை அனுபவிப்பார்கள். அரசியல்வாதிகளால் சட்டங்களை உருவாக்கி முடியும். நீதிமன்றங்களை உருவாக்க முடியும். ஆனால் மக்களையும், நாட்டையும் காப்பாற்றும் சக்தி தர்மத்துக்கு மட்டுமே உள்ளது. இறைவனை விட உயர்ந்தது தர்மம்.


மொட்டை தாசன்...
பிப் 18, 2025 16:07

உடனடியாக குற்றவாளிகளை கைதுசெய்த போலீஸ்க்கு வாழ்த்துக்கள். சரியான சட்டமிருந்தும் கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு வழங்காததே குற்றங்கள் அதிகரிக்க காரணமாகும்.


முக்கிய வீடியோ