சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்
கோவை : கோவையை சேர்ந்த சிறுமி, 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகில், உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் அகில், 20, தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். நேற்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அகில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அப்போது மாணவியின் பெற்றோர் வந்ததை தொடர்ந்து, அவர் தப்பினார். மாணவியின் பெற்றோர், கோவை காட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய அகிலை தேடி வருகின்றனர்.