ஷோக்கேஸ் உடைப்பு; டிரைவர் கைது
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - - ஊட்டி சாலையில் பேக்கரியில் கண்ணாடி ஷோக் கேஸ்ஸை உடைத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திவ்யா என்ற பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பிரசாந்த், 29, டிரைவர் தொழில் செய்து வருகிறார்.பிரசாந்த் பேக்கரி உரிமையாளருக்கு போன் செய்து 'என் மனைவி வேலை செய்வது எனக்கு பிடிக்கவில்லை, அவரை எதற்காக வேலைக்கு சேர்த்துள்ளீர்கள்' என கேட்டுள்ளார்.இதற்கு உரிமையாளர் பேக்கரிக்கு வாங்க பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் பேக்கரிக்கு சென்ற பிரசாந்த் தன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை கொண்டு பேக்கரியில் உள்ள கண்ணாடி ஷோக்கேஸ்ஸை உடைத்தார். மேலும் தடுக்க சென்ற பேக்கரி ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.இதையடுத்து, பேக்கரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் பிரசாந்தை கைது செய்தனர்.--