உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயணிகளின் நன்மைக்காக ரயில்வே ஸ்டேஷனில் ஷெட்

பயணிகளின் நன்மைக்காக ரயில்வே ஸ்டேஷனில் ஷெட்

கோவை:பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், ஷெட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில்கள் பெரும் உதவியாக உள்ளன. கோவை வழியாக தினமும், 52க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இதனால், கோவை ரயில்வே ஸ்டேஷனில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும். வடமாநிலங்களுக்கு பெரும்பாலும் அதிகாலையிலேயே ரயில்கள் உள்ளன. அந்த ரயில்களில் ஏற, வடமாநிலத்தவர் பலரும் மாலை பணி முடிந்ததும், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் வந்து படுத்து விடுகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, ரயில்வே ஸ்டேஷன் முன்புறப் பகுதியில் ெஷட் அமைக்கப்பட்டு வருகிறது. ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயணிகள் நல நிதியில் பணிகள் நடந்து வருகின்றன. இரவில் தங்கும் பயணிகளின் வசதிக்காக இவை ஏற்படுத்தப்படுகின்றன. 700 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இனி பயணிகள் தரையில் அமர வேண்டிய அவசியம் இருக்காது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை