மேலும் செய்திகள்
கருமலை ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
30-Aug-2025
மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
05-Sep-2025
அன்னுார்: குப்பேபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குப்பேபாளையத்தில், ஜஹோரன்ஸ்கி நிறுவன வளாகத்தில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 8:15 மணிக்கு விமானங்களுக்கும், இதையடுத்து மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அருளுரை வழங்கினார். வெளி நாடுகளைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.
30-Aug-2025
05-Sep-2025