மேலும் செய்திகள்
ரூ.1.16 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
05-Jul-2025
கோவை; ஆனி, ஆடி மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால், பட்டுக்கூடு உற்பத்தி அதிகரிக்கும் என, பட்டுக்கூடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கோவை பட்டு அங்காடிக்கு மாதம், 25 டன் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 549 ரூபாய்க்கும், அடுத்த தரம் 300 ரூபாய்க்கும் விற்பனையானது. பட்டு நுால் மார்க்கெட் நிலவரம் ஒரு கிலோ, 4028 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. பட்டு விவசாயிகள் கூறுகையில், 'பொதுவாக ஆனி, ஆடி மாதங்களில் காற்று அதிகம் இருக்கும். இந்த காற்றுக்கு பட்டுக்கூடு உற்பதி அதிகரிக்கும். 'இடையில் மழையும், வெயிலும் இல்லாமல் இருக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் பண்டிகை வர இருப்பதால், பட்டு நுாலுக்கான தேவையும் அதிகரிக்கும். விலையும் கூடும்' என்றனர்.
05-Jul-2025