உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

 பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள், ஆனைமலையில் நடந்த பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர். தமிழக பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம் சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம் ஆனைமலையில் நடந்தது. அதில், வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்குடன், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய துணை வேளாண் தொழிலாக விளங்கும், பட்டு வளர்ப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டு வளர்ப்பு கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் ஏற்ற தொழிலாக உள்ளது.பட்டு வளர்ப்பின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது, மல்பெரி செடி வளர்ப்பு மற்றும் பட்டுப்புழு பராமரிப்பு முறைகள், அரசு வழங்கும் மானியங்கள், பயிற்சிகள், சந்தை வாய்ப்புகள் குறித்து தகவல் வழங்குவது குறித்து விளக்கப்பட்டது. மல்பெரி சாகுபடி முறைகள், பட்டுப்புழு வளர்ப்பு நிலைகள், நோய் மேலாண்மை, அறுவடை முறைகள் குறித்து விளக்கப்பட்டன.மேலும், பட்டுக்கூடு தேவை, பட்டுக்கூடு விலை நிலவரம், சந்தை மதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ