புதிய பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
மேட்டுப்பாளையம்; பள்ளியில் புதிதாக சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு, வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லாறில் சத்குரு ஆதிவாசிகள் குருகுலப்பள்ளி உள்ளது. ராமலிங்க அடிகளாரால் நிறுவப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. அரசின் அனைத்து சலுகைகளும், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தன்னார்வ தொண்டு அமைப்பினர், தன்னார்வலர்கள் இப்பள்ளி கட்டடத்தை சீரமைத்து, புது பொலிவு பெறச் செய்தனர். 2025--26ம் புதிய கல்வி ஆண்டில், இப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.காரமடை வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, சிறுவர், சிறுமியருக்கு வெள்ளி நாணயம் வழங்கினார். இவ்விழாவில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ், அரிமா சங்க ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.