பி.எஸ்.ஜி.பார்மசி கல்லுாரியின் வெள்ளி விழா கொண்டாட்டம்
கோவை; கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லுாரியின், 25ம் ஆண்டு வெள்ளி விழா, நேற்று ஐ.எம்.எஸ்.ஆர். அரங்கில் நடந்தது. சிக்கிம் மைக்ரோ லேப் நிறுவன துணை தலைவர் ரமேஷ், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது: துறை எதுவாக இருந்தாலும், நம் அறிவை 'அப்டேட்' செய்து கொள்ள வேண்டும். தனித்திறன் வாயிலாகவே நிலைத்து நிற்க முடியும். கடின உழைப்பு, நம்பிக்கை, தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல் ஆகிய மூன்று அம்சங்களும், வெற்றியாளர்களிடம் இருக்கும். பார்மசி துறையில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஒவ்வொரு மருந்து சீட்டுக்கு பின்னும், பல சோக கதைகள் உள்ளன. பொறுப்புகளை உணர்ந்து கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்வில், வெள்ளி விழா ஆண்டுக்கான பிரத்யேக லோகோ வெளியிடப்பட்டு, புதிய வெப்சைட் துவக்கி வைக்கப்பட்டது. லோகோ வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பி.எஸ்.ஜி. நிறுவன அறங்காவலர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி.பார்மசி கல்லுாரி முதல்வர் ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.