வேளாண் பல்கலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயிர்ம வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்ட உதவியுடன், வரும் 30ம் தேதி முதல், நவ. 29 வரை, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள், பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சி முற்றிலும் இலவசம். பயிற்சியின்போது ஊக்கத்தொகை வழங்கப்படும். உயிர்ம வேளாண் வல்லுநர்கள் வாயிலாக, இடுபொருள் தயாரிப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்படும். சாதனை புரிந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெறும். இயற்கை, உயிர்ம விவசாய பண்ணை சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். விவரங்களுக்கு, 94867 34404 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.