பணத்துக்கான தேடலில் தஸ்புஸ் அதிகரிக்கிறது ஸ்லீப் டைவர்ஸ்
பொ ருளாதார தேவைகளை நோக்கிய ஓட்டத்தில், நம்மில் பலர் உறவுகளின் பிணைப்பில் இருந்து வெளியேறி விடுகின்றனர். கணவன் -- மனைவி பல்வேறு காரணங்களால் தனித்தனி அறையில் உறங்குவதே, பல விவாகரத்துக்கு துவக்கமாக அமைகிறது என்கின்றனர், உளவியல் நிபுணர்கள். வழக்கறிஞர் பிரீத்தி ராகவேந்திரன் கூறியதாவது: விவாகரத்து கோரி வருபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். வன்கொடுமை, திருமணம் மீறிய தொடர்பு, நோய் என 8 பிரிவுகள் உள்ளன. இதில், சில தவிர்க்க முடியாதவை. சரியான புரிதலை ஏற்படுத்த பெரும்பாலான தம்பதிகள் முயற்சி எடுப்பதில்லை. முடிந்தவரை கவுன்சிலிங் அளித்து சேர்த்து வைக்கவே சட்டம் முயற்சிக்கிறது. தம்பதிகளுடன் பேசுவதில் இருந்து, ஒரு சிலவற்றை புரிந்துகொள்ள முடிகிறது. பொருளாதாரத்தை தேடி ஓடுவதில் ஒருவருக்கொருவர் அமர்ந்து பேசுவது கூட இல்லை. தற்போது, குறிப்பாக பணி நேரம், குறட்டை, குழந்தைகள் போன்ற காரணங்களால் கணவன்-மனைவி தனித்தனியாக உறங்க விரும்புகின்றனர்; உளவியல் ரீதியாகவும் கணவன்-மனைவி ஒரு அறையில் படுப்பது அவசியம். குடும்பம், குழந்தை, செக்ஸ் இதை தாண்டி அவரவர் உணர்வுகளை, மகிழ்வை, கவலைகளை பகிர்ந்துகொள்ளும் நேரம், 'பெட்-டைம்' என்பார்கள். இன்றைய சமூகத்தில் அதற்கான நேரம் என்பதே இன்றி, தம்பதிகள் இயந்திரத்தனமான வாழ்வை எதிர்கொள்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். உணர்வுகளை பங்கிடும் இடம்தான் படுக்கையறை ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனமான 'ரெஸ்மெட்' ஆய்வுகளின் படி, 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது உலகளவில் அதிகரித்துள்ளது. 'பெட் டைம்' என்பதை அனைத்து தம்பதிகளும் பின்பற்றவேண்டும். செக்ஸ் என்பதை தாண்டி, ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவும், உணர்வுகள், மகிழ்வுகள், வலிகள், பிடித்தது, பிடிக்காதது போன்றவற்றை பகிரும் இடமாக, வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் பிறந்த பின், தனித்தனியாக படுப்பது துவங்கி அது தனித்தனி அறையாக மாறிவிடுகிறது. இந்த பழக்கம் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில்தொடர்வது கட்டாயம் விவாகரத்துக்கு வழிவகுக்கும். விவாகரத்து இல்லை என்றாலும், மன அழுத்தத்துடன் வாழவேண்டிய சூழலை உருவாக்கும். -சுமித்தா சாலினி உளவியல்ஆலோசகர்குடும்பம், குழந்தை, செக்ஸ் இதை தாண்டி அவரவர் உணர்வுகளை, மகிழ்வை, கவலைகளை பகிர்ந்துகொள்ளும் நேரம், 'பெட்-டைம்' என்பார்கள். இன்றைய சமூகத்தில் அதற்கான நேரம் என்பதே இன்றி, தம்பதிகள் இயந்திரத்தனமான வாழ்வை எதிர்கொள்கின்றனர்.