உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆழியாறு சோதனைச்சாவடியில் மோப்பநாயுடன் சோதனை

ஆழியாறு சோதனைச்சாவடியில் மோப்பநாயுடன் சோதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சோதனைச்சாவடியில், மோப்ப நாய் உதவியுடன் போதைப்பொருட்கள் குறித்து, போலீசார் சோதனை மேற்கொண்டனர். பொள்ளாச்சி அருகே, ஆழியாறு, வால்பாறை சுற்றுலா தலங்களாக உள்ளன. உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியர், ஆழியாறு அணை மற்றும் கவியருவிக்கும் செல்கின்றனர். ஆழியாறு சோதனைச்சாவடியில், வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில், போலீசார், வனத்துறையினர் இணைந்து, மோப்ப நாய் உதவியுடன் வாகனங்களில் திடீரென சோதனை மேற்கொண்டனர். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில், போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபானங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். சுற்றுலாப்பயணியர் பாதுகாப்பாக செல்லவும், வாகனங்களை வழியில் நிறுத்தக்கூடாது, என, அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை