உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்.,சார்பில் புத்தாக்க ஸ்டூடியோ

எஸ்.என்.எஸ்.,சார்பில் புத்தாக்க ஸ்டூடியோ

கோவை; எஸ்.என்.எஸ்., நிறுவனங்கள், பெங்களூருவைச் சேர்ந்த வைஸ் வொர்க் நிறுவனத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, கூட்டுப் பணியிடம் வைஸ்வர்ஸ் புத்தாக்க ஸ்டுடியோவை திறந்துள்ளது.எஸ்.என்.எஸ்., நிறுவனங்கள் மற்றும் வைஸ் வொர்க் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக அமைந்த இந்த ஸ்டுடியோ, மாணவர்களிடையே புத்தாக்க சிந்தனையையும், தொழில்முனைவு மனப்பான்மையையும் வளர்ப்பதை, நோக்கமாகக் கொண்டுள்ளது. எஸ்.என்.எஸ்., நிறுவனங்களைச் சேர்ந்த 10 மாணவர்கள் வைஸ் வொர்க் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்புகளை பெற்று, மதிப்புமிக்க தொழில்துறை அனுபவத்தைப் பெறுவார்கள் என, எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் தெரிவித்தார்.வைஸ் வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மதன் குமார் ஸ்ரீனிவாசன், எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார், எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி முதல்வர் சார்லஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை