உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் கடத்தல் விவகாரம்; ஆர்.டி.ஓ., ஆய்வு

மண் கடத்தல் விவகாரம்; ஆர்.டி.ஓ., ஆய்வு

சூலுார்; சூலுார் விமானப்படை தளத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் செம்மண் கடத்தப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.சூலுாரில் விமானப்படைத் தளம் உள்ளது. விமானப்படைத்தள விரிவாக்க பணிக்காக, கலங்கல், காடாம்பாடி, அப்பநாயக்கன்பட்டி, பருவாய் உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், விமானப்படைத் தளத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.சட்டவிரோதமாக பல அடி ஆழத்துக்கு, செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு, இரவு நேரத்தில், லாரிகளில் கடத்தப்படுவதாகவும், இதனால், விமானப்படைத்தளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.இதுதொடர்பாக கோவை தெற்கு ஆர்.டி.ஓ.,ராம்குமார், சூலுார் தாசில்தார் சரண்யா மற்றும் அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆர்.டி.ஓ., கூறுகையில், ''சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை