இ.க்யூ., மேக் சார்பில் சோலார் கண்காட்சி, மாநாடு: வரும் செப்., 11 ல் கோவையில் நடக்கிறது
கோவை; இ.க்யூ., மேக் சார்பில் வரும் செப்., மாதம் கோவை கொடிசியாவில் சோலார் கண்காட்சி நடக்க உள்ளது.இ.க்யூ., மேக் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின், 16 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் செப்., 11 மற்றும், 12 ம் தேதிகளில் கோவையில் குளோபல் சோலார் கண்காட்சியை நடத்துகிறது.இதில், சி அண்ட் ஐ கிரீன் எனர்ஜி சந்திப்பு, தென்னிந்திய குசும் சந்திப்பு, சோலார் வாங்குவோர், விற்பனையாளர்கள் சந்திப்பு, சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, நிலைத்தன்மை, கார்பனைசேஷன் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கான விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளன.வரும், 11ம் தேதி காலை 9:00 மணிக்கு விழா துவங்கஉள்ளது.கார்ப்போரேட் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.மேலும், விபரங்களுக்கு, 96444 -00923, 96441 22268, -70890 36000, 96300 -22255 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.