உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் மின் உற்பத்தி மென்பொருள் பயிற்சி

சோலார் மின் உற்பத்தி மென்பொருள் பயிற்சி

கோவை : கோவை வேளாண் பல்கலையில், சோலார் மின்உற்பத்தி முறை சார்ந்த மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி நடந்தது.வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு, இப்பயிற்சி வழங்கப்பட்டது.சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்வதைக் கணக்கிடல், ஆற்றல் இழப்பை மதிப்பிடுதல், சோலார் வசதி கொண்ட கட்டடத்தின் ஆன் கிரிட், இணைக்கப்படாத ஆப் கிரிட், சோலார் மின் மோட்டார் போன்றவற்றை, சிறந்த முறையில் வடிவமைப்பதற்கான மென்பொருளை உருவாக்குவது தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டது.கல்லூரி டீன் ரவிராஜ், தொழில்நுட்ப நிபுணர் சவுமியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை பேராசிரியர் மகேந்திரன் உள்ளிட்டோர், பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அளித்தனர்.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை